சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதனால் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று தேவஸ்தனம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐயப்பனின் மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டாலும், கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும் முன்பதிவு செய்யாமல் ஏராளமான பக்தர்கள் வந்தாலும் அனுமதி அளிக்கப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. அதனால் சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.