Categories
கிரிக்கெட் விளையாட்டு

Breaking: ‘விடைபெறுகிறேன்’.. கிரிக்கெட் பிரபலம் கொடுத்த ஷாக்…ரசிகர்கள் அதிர்ச்சி…!!!’

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பார்த்திவ் படேல் அனைத்து வகையான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் பார்த்திவ் படெல் தனது 18 ஆண்டு வாழ்க்கையில் இந்தியாவுக்காக 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் 2 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் குஜராத்துக்காக 194 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்டின் ஷாமில் இந்திய அணியில் அறிமுகமானார். அவர் இந்தியாவிற்காக டெஸ்ட் விளையாடிய இளைய விக்கெட் கீப்பர். அப்போது அவருக்கு வயது 17.

அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் இந்திய அணியில் வந்த பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வருடம் முதல் ரஞ்சி டிராபி போட்டியில் குஜராத்தாக விளையாடினார். இருந்தாலும் அணியில் இடத்தை பெற முடியவில்லை. ஏனென்றால் மற்றொரு விக்கெட் கீப்பர் இவருக்கு எதிராக தேர்வானார். இருந்தாலும், அவர் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்.

மேலும் 2015ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் 339 ரன்கள் குவித்தார். குஜராத் விஜய் ஹசாரே கோப்பையை வெல்வதற்கு இவர் பெரிதும் உதவினார். இதனையடுத்து முப்பத்தைந்து வயதான அவர், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |