Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னத்தில் காயம் எப்படி ஏற்பட்டது… இது கொலையா..? தற்கொலையா..? போலீசார் தீவிர விசாரணை..!!

சித்ராவின் கன்னத்தில் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னத்திரை நடிகையும், விஜேவுமான சித்ரா இன்று காலை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் நேற்றிரவு, சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சீரியல் ஷுட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதை முடித்துவிட்டு இன்று அதிகாலை அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் வந்து தங்கியுள்ளார். அப்போது தான் குளிக்கப்போவதாக கூறி ஹேமந்தை வெளியே செல்லச் சொல்லியிருக்கிறார்.

ஹேமந்தும் வெளியில் காத்திருக்க நீண்ட நேரமாகியும் சித்ரா வெளியே வராததால் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து விடுதியில் உள்ள ஊழியர்களிடம் மாற்று சாவியை வாங்கி ஹேமந்த் ரூமின் உள்ளே சென்றுள்ளார். அப்போது தான் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரின் இறப்பின் காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே சித்ராவின் உடலில் கண்ணம் உட்பட பல்வேறு இடங்களில் காயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

Categories

Tech |