Categories
சினிமா தமிழ் சினிமா

ஹேம்நாத் இடம் விசாரணை… “பதிவு திருமணம் செய்து கொண்டோம்”… அவிழும் மர்ம முடிச்சுகள்..!!

சீரியல் நடிகை சித்ராவின் இறப்பு குறித்து அவரது வருங்கால கணவருடன் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இப்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் பிரபலமாவதற்கு சித்ரா மிகப்பெரிய காரணம். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட செய்தி காலை முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று இரவு சூட்டிங்கை முடித்து விட்டு நாசரேத் பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தனது வருங்கால கணவருடன் தங்கியிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத் இடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதில் அவரும், சித்ராவும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதனால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |