பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திருமணம் நிச்சயக்கப்பட்ட ஹோம்நாத்துடன் அறையில் தங்கியிருந்த போது அவர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.