Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் சாந்தமானவன்” வர்ணனையாளரிடம் தமிழில் பேசிய நடராஜன்… வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக விளையாடிய நடராஜன், வர்ணனையாளரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்ததோடு, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்துவீசி வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் இந்திய அணி டி20 தொடரை வெல்ல பெரிதளவில் கை கொடுத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பவுலிங் யூனியனில்  புதிய நட்சத்திரமாக நடராஜன் இடம்பிடித்துள்ளார்.

மூன்றாவது டி20 ஆட்டத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை பகிரும் வகையில் அவருடன் தமிழில் பேசியிருந்தார் வர்ணனையாளர் மற்றும் இந்திய முன்னாள் வீரர் முரளி கார்த்திக். அதற்கு பதிலளித்த நடராஜன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பலம்வாய்ந்த அணியுடன் மோதி வெற்றி பெற்றுள்ளோம். இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு என் திறமையை காட்ட ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது.

உடனிருந்த அனைத்து வீரர்களும் எனக்கு உதவி செய்தார்கள். என்னுடைய பலமே யார்க்கர்தான் அந்த பாலத்தை நான் நம்பினேன். விளையாட வேண்டுமென்று இறங்கினேன். அதே நேரத்தில் விக்கெட்டுக்கு ஏற்றவகையில் கேப்டனிடம் எப்படி விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதற்கேற்ற வகையில் பந்துவீச்சினேன். “நான் சாந்தமானவன், எதற்குமே ஆவேச படம் மாட்டேன்” என்று தமிழில் தெரிவித்துள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

https://youtu.be/CVG-Ym3-vV8

Categories

Tech |