Categories
தேசிய செய்திகள்

40க்கு விற்கவேண்டிய பெட்ரோல் டீசல் விலை… இந்தியாவில் மட்டும் 90?…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மற்றநாடுகளில் குறையும் போது இந்தியாவில் மட்டும் குறையாமல் இருப்பது ஏன் என்று எம்பி சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டி விடும் என்று பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால் மற்றும் மளிகை பொருட்களின் விலை பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன. இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது, அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைகின்றன. ஆனால் இந்தியா மட்டும் கச்சா எண்ணெய் வரியை உயர்த்தி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டு இருப்பதால் 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோல் விலை தற்போது 90 ரூபாய் வரை விற்பனையாவதாக எம்பி சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |