நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்களை டிரெண்டிங்கில் கொண்டுவர மோதிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஜய் ,அஜித், சூர்யா ஆகியோருக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். வழக்கமாக தல-தளபதி அதாவது விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். ஆனால் தற்போது வித்தியாசமாக விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்குகளை டிரெண்டிங்கில் கொண்டுவர மோதிக் கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட பதிவாக நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விஜய் ரசிகர்கள் #VIJAYRuledTwitter2020 என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தின் #SooraraiPottru என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. இதனால் சூர்யா ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக #SURIYARuledTwitter2020 என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .