சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எட்டு வழி சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை-சேலம் சாலை திட்ட இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது சேலம்- சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறாமலேயே, இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதை உச்ச நீதிமன்றம் கண்டித்தது.
எட்டு வழி சாலை திட்டத்திற்கு தடை நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சேலம் மாவட்டம், ராமலிங்கபுரம் பகுதியில் விவசாயிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். இந்தத் திட்டத்தில் தடை நீடிக்கும் என்ற உத்தரவை சேலம் மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.