சிம்புவின் சகோதரன் குறளரசனின் திருமணம் சமீபத்தில் நனைப்பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றும், சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் கேள்வி எழுகிறது. இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியிருக்கிறார். இவர் சிம்புவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சிம்புவின் நண்பரான சுரேஷ் சிம்பு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர் டி.ராஜேந்தர் நடத்தி வரும் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார். அந்த நிமிடம் பட விழாவில் கலந்துக் கொண்ட கூல் சுரேஷ், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும், அவருக்கு பார்த்துள்ள பெண் யார்? என்றும் அவரது கல்யாணம் எப்போது என்றும் எனக்கு தெரியும். அதனால் யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூல் சுரேஷ் கூறியுள்ளார்.