வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி செய்ய தேவையான பொருள்கள்:
பால் – ½ லிட்டர்
முட்டையின் மஞ்சள் கரு – 4
சர்க்கரை – 1 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
ஜெல்லி கிரிஸ்டல் – 1 பாக்கெட்
செய்முறை:
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் பாலை ஊற்றி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்பு மற்றோரு பாத்திரத்தில், முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து, அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் கொதித்த பாலில், கலக்கி வைத்த முட்டையின் மஞ்சள் கருவை ஊற்றி நன்கு கலக்கி மறுபடியும் கொதிக்க வைத்து, எடுத்து அப்படியே எடுத்து, குளிர் சாதன பெட்டியில் வைத்து கொள்ளவும்.
அதன் பின்பு குளிர வைத்த கலவையை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து குளிர் சாதனத்தில் வைத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் ஜெல்லி கிரிஸ்டலை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும்.
பின்பு கொதிக்க விட்ட ஜெல்லி கிரிஸ்டலை எடுத்து, அச்சில் ஊற்றி அதை அப்படியே வைத்து வடிவம் பெறவும்.
இறுதியில் குளிர் சாதனத்தில் பெட்டியில் வைத்த ஐஸ் கிரீம்யை எடுத்து, வடிவம் பெற்ற ஜெல்லியுடன் சேர்த்து பரிமாறினால், குழந்தைகளுக்கு பிடித்த ருசியான வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி ரெடி.