Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காதலனை தேடி சென்ற 15 வயது சிறுமி… சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்… நிலைகுலைந்து போன வாழ்க்கை..!!

காதலனைத் தேடி சேலத்திற்கு வந்த சிறுமியை கடத்தி சென்று நண்பன் வீட்டில் அடைத்து வைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், பூஞ்சோலை ஈசிஆர் ரோடு சேர்ந்த 24 வயதான சூர்யா, சென்னை பட்டாபிராம் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சேலம் அருகே உள்ள தனது சகோதரி பிரியா வீட்டிற்கு சூர்யா அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என்று பட்டாபிராம் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதனை அறிந்த பிரியா மற்றும் அவரின் கணவர் மணிகண்டன் சீரியலுக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் காதலனை பார்க்காமல் தவித்த சிறுமி, யாருக்கும் தெரியாமல் பஸ்ஸில் ஏறி கடந்த 4ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். பின்னர் அவருடைய மொபைலில் இருந்தே பிரியாவிற்கு அழைத்து பேசியுள்ளார். உடனே ப்ரியா அரைமணி நேரத்தில் தான் அங்கு வருவதாகவும், நீ அங்கிருந்து எங்கும் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அவர் அங்கு வந்து பார்க்கும்போது சிறுமியை காணவில்லை. பின்னர் ஆட்டோ டிரைவரின் செல்போனிற்க்கு பிரியா தொடர்பு கொள்ள முயற்சித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதுகுறித்து ப்ரியா போலீசிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வீராணம் போலீஸ் ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து அந்த சிறுமியை அடைத்து வைத்திருந்த வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும் ஆட்டோ டிரைவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |