தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் நீங்கள் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது.
வங்கிகளை போன்று இனி தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தபால் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 11ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. குறைந்தபட்ச தொகை 500 ரூபாயை பராமரிக்க வேண்டும்.
இல்லையெனில் நிதி ஆண்டின் இறுதியில் அந்த கணக்கில் இருந்து 100 ரூபாய் கட்டணமாக கழித்துக் கொள்வார்கள். அதற்கான பணம் இல்லை என்றால் கணக்கை முடக்கி விடுவார்கள். அதேபோல் குறைந்தபட்ச தொகை பராமரிக்காவிட்டால் அம் மாதத்திற்கான வட்டி வழங்கப்பட மாட்டாது என்று தபால் துறை தெரிவித்துள்ளது.