Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த காலத்துலையும்…. இப்படியொரு கொடுமையா….? 50 பேர் மீது வழக்குபதிவு…..!!

ஜாதி ஆணவத்தால் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பிணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் சுடுகாட்டில் செல்வதற்காக கால்வாயில் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் வழியாக பல்வேறு சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலூர் கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரின் உடலை பாலத்தின் வழியாக கொண்டு செல்வதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் உயிரிழந்தவரின் உடலை வைத்து இலயங்குடி செல்லும் சாலையில் இறந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரும் அதே ஜாதி ஆணவத்தோடு ஒருபுறம் போராட்டம் நடத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த எஸ்பி லோகநாதன் ராஜகோபால் பட்டியலில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இறந்து போனவரின் உடலை பொது பாதையில் கொண்டு சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். நீங்கள் எப்போதும் கொண்டு செல்லும் பாதையை சீர் அமைத்து தருகிறோம் என்று பேசினார். இதற்கு இறந்தவரின் உறவினர்கள் பொதுப்பாதையில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா? என்று கூறி மேலும் போராட்டம் நடத்தினர்.

சனிக்கிழமை இரவு பதினோரு மணி வரை இந்த பிரச்சனை நடந்தது. பட்டினத்தாரின் உடலை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்த சமூகத்தினரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் உறுதியளித்தனர். மேலும் தலித் மக்கள் வழக்கமாக செல்லும் பாதையையும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சரி செய்யப்பட்டது. இதையடுத்து பெண்ணின் உடலை உறவினர்கள் பொதுப்பாதையில் கொண்டு சென்று அடக்கம் செய்தனர். ஜாதி ஆணவத்தோடு போராட்டம் நடத்திய நபர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

என்னதான் தொழில்நுட்பம், அறிவியல் என்று நாடு வளர்ச்சியை நோக்கி சென்றாலும், இன்னும் பிற்போக்குத்தனமாக இதுபோன்று ஜாதியை காரணம் காட்டி தீண்டாமையை கடைப்பிடித்து வருகின்றனர். இதுபோன்ற தீண்டாமை என்கின்ற அவல நிலை எப்போது ஒழியும்.

Categories

Tech |