கோவையில் கணவன் மனைவிக்கு இடையே நடந்த குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், கருமலைசெட்டிபாளையம் அஜய் முக்ரிஜி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக மீண்டும் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கணவரிடம் சண்டை போட்டு மனைவி அம்பிகா அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஆனந்த் பலமுறை அம்பிகாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்துஉள்ளர். ஆனால் அம்பிகா வர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனமுடைந்த ஆனந்த் ந.வ 4 -ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் குறித்து ஆர்எஸ் புரம் காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.