Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இளம் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்… கழிப்பறைக்குச் சென்ற இடத்தில்… அரசு அலுவலகத்தில் இப்படியொரு அவல நிலை..!!

வேளாண் துறை அலுவலகத்தில் கழிவறை இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு சென்ற இளம்பெண் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு. வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. இதில் இளநிலை ஆளுநராக சரண்யா என்பவர் பணிபுரிந்து வருகிறார். வேளாண்மை விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாததால் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். தொடர் மழையின் காரணமாக பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. இந்நிலையில் கழிவறைக்கு வெளியே உள்ள செப்டிக் டேங்க் மீது இருந்த ஓட்டில் கால் வைத்த போது ஓடு உடைந்து சரண்யா செப்டிக் டேங்க் விழுந்தார்.

கழிவறைக்கு சென்ற பெண் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது அவர் செப்டிக்டேங்கில் உயிருக்கு போராடி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை அங்கிருந்து மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சரண்யா உயிரிழந்து விட்டார். அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தினால் பக்கத்து வீட்டிற்கு சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியை தொடர்பு கொண்டு கேட்கும்போது, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |