Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பக்கத்து வீட்டுக்காரனுடன் தகராறு” ஸ்கிப்பிங் கயிறால்”… வாலிபனை கைது செய்த போலீஸ்..!!

பெரம்பலூர் அருகே கயிறை வைத்து இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தில் வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சம்பூரணம். இவர்களுக்கு ஜஸ்மிதா, அஷ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினத்தன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது ராஜா வீட்டின் அருகே வசிக்கும் ஸ்ரீரங்கன் மகன் ராஜா என்பவர் தகராறு செய்துள்ளார். இவர்கள் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராதா ஸ்கிப்பிங் கையால் சம்பூர்ணத்தின் கழுத்தை நெரித்து உள்ளார்.

அப்போது குழந்தைகள் கதறி அழுதுள்ளது. இதனை அடுத்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தற்போது சம்பூரணம் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சம்பூர்ணத்தின் தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ராஜாவை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |