Categories
டெக்னாலஜி பல்சுவை

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின்  சிறப்பு அம்சங்கள்!!

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A  மற்றும் பிக்சல் 3A  XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை வெளியிட்ட போன்களில் இந்த ஸ்மார்ட் பிக்சல்  போன்கள்  கூகுளின் விலை குறைந்தவையாக இருக்கின்றன. புதிய பிக்சல் 3A  ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் அதனை  சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிதான காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் (iFixit) தெரிவித்துள்ளனர்.

Image result for Special features of Google Pixel 3A and Pixel 3A XL smartphones

விமர்சகர்கள் (iFixit) பிக்சல் 3A  மற்றும் பிக்சல் 3A  XL மாடல் போன்களுக்கு  சரி செய்யக்கூடிய வசதிகள் நிறைந்த விஷயத்திற்கு 6/10 புள்ளிகளை வழங்கியுள்ளனர். இந்த 2019 விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களில், அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு இருப்பதால் இவற்றை எளிதில் சரி செய்ய  முடியும் என தெரிவித்திருக்கின்றனர். புதிய பிக்சல் 3A  சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே மட்டுமே கடினமாக பொருத்தப்பட்டிருக்கிறது.

Related image

மேலும் சோதனையில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான பொருத்தப்படும்  வைப்ரேட்டர் மோட்டார் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2 மாடல்களிலும் பேட்டரியை மாற்றுவது எளிமையாக இருக்கிறது. பிளாஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கும் பிக்சல் 3A  மற்றும் பிக்சல் 3A  XL ஸ்மார்ட்போன்களின்  முறையே ரூ.39,999 மற்றும் ரூ.44,999 என விலை  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |