பெண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் நீங்க வீட்டிலேயே சுலபமான முயற்சியை செய்யலாம்.
உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர்களுக்கு பலனளிக்கும் வகையில் வீட்டிலேயே எளிமையாக செய்யும் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திராட்சைச் சாறுடன் அரிசிமாவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று ஆகும்.
மேலும் பட்டர் ஃப்ரூட் என்று சொல்லப்படும் அவகடோ சதைப்பற்றுடன் சிறிது வெண்ணை மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, தோலின் முதுமை தன்மையை குறைக்கும். இவற்றைவிட வாழைப்பழத்தின் தோல் மிகவும் நல்லது. இதனை சிறிது நாட்கள் செய்து வந்தால் முகத்தில் மாற்றம் ஏற்படுவது உங்களுக்கு நன்றாக தெரியும்.