ரஜினிகாந்த் புதிதாக ஆரம்பிக்கும் கட்சியின் அலுவலகப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அத்துடன் கட்சியின் பெயர் கொடி ஆகியவை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரஜினிகாந்த் அரசியல் தொடங்குகிறார் கட்சியை குறித்து வரும் ஜனவரி 30ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார், அதில் இடம்பெறும் சின்னம் என்ன என்பது குறித்து அக் கட்சியில் உள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் ஜனவரி மாதம்தான் கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.
ஜனவரி 31ஆம் தேதி அதற்கான தேதி அறிவிக்கப் போவதாக கூறியுள்ளார். எம்ஜிஆருக்கு பிறகு சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் கட்சி தொடங்கினாலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றவர் விஜயகாந்த் மட்டுமே. ஜெயலலிதா, கலைஞர், கருணாநிதி போன்றவர்கள் அரசியலை தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தபோது தடம் பதித்தவர். அவரது பாணியிலேயே முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கோடம்பாக்கத்தில் உள்ள தனது சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கட்சி அலுவலகம் மாற்ற உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன
மேலும் இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தியும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியில் எந்த தேதியில் கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். கட்சிக்கு என்ன பெயர் கொடி என்பதை குறித்து விவாதம் கிளம்பியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கழகம் என்ற பின்னொட்டு உடன் கட்சிகளின் பெயர்கள் அமர்ந்திருக்கும்.
ஆனால் அண்மையில் கமலஹாசன் தொடங்கிய கட்சிக்கு கழகம் ஆகியவற்றில் இருந்து சற்று விலகி மய்யம் என்ற பின்னொட்டு வைத்து கட்சியின் பெயரை வெளியிட்டார். அதேபோல் ரஜினியும் படங்களில் அண்ணாமலை அருணாச்சலம் படையப்பா என்ற பெயர்களை வைத்து வெற்றி கண்டவர். அந்த வகையில் படை என்று முடியும் கட்சி பெயரை வைக்க உள்ளதாக கூறுகின்றனர். அதேபோல் கட்சிக்கொடி வடிவமைக்கவும் ரஜினி ரசிகர்கள் தற்போது நீளம், வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களில் நடுவில் ஸ்டார் சின்னத்தில் ரஜினிகாந்த் படத்தை பொருத்தும் கொடி பிடிக்கின்றனர்.
இந்த கொடி சூப்பர் ஸ்டார் ரஜினி என்பதை பொருள் படுத்தும் விதமாக அமைகின்றது. இப்படத்தில் ரஜினியின் புகைப்படம் இருக்கின்றதோ இல்லையோ அதில் பாபா முத்திரை கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வேறு என்ன சின்னம் கொடியில் இருக்கும் என்று விசாரிக்கும் போது 2017 ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த போது அமைக்கப்பட்ட மேடையின் புகைப்படத்தை ரசிகர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த புகைப்படத்தில் தாமரை மீது பாபா முத்திரை இடம் பெற்றிருக்கும்.