இனிமேல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டில் பெரும்பாலான விபத்துகள் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படுகின்றன. அதனை தடுக்கும் வகையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் பெட்ரோல் கிடையாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த புதிய விதி கொல்கத்தா நகரில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கையால் விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமன்றி அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் இடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.