விக்கிரமங்கலத்தில் மது விற்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் மது விற்ப்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்து. அந்த தகவலின் படி ஸ்ரீபுரந்தான் பகுதியில் சோதனையின் போது அங்கு வசித்த 45 வயது மதிக்கத்தக்க கமலா என்பவரின் வீட்டின் பின்புறம் மது விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்த மது பாட்டில்களை காவல்துறை பறிமுதல் செய்தனர். மேலும் இச் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து கமலாவை போலீசார் கைது செய்து உள்ளனர்.