டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய பந்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு விவசாயிகளுடன் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்றுடன் ஒன்பது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அனைத்து சாலைகளை முடக்க போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்த போவதாக அவர்கள் கூறியுள்ளனர். அன்றைய போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் தடுக்கப் போவதாக விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான ஹரிந்தர் சிங் லோகோ வால் கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் ஆட்சியர்களின் உருவ பொம்மைகளை எரித்தும் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். ‘அரசு எவ்வளவு சமாதானம் சொன்னாலும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வரை ஓயமாட்டோம்’ என்று பஞ்சாப்பை சேர்ந்த ஜம்போரி கிசான் சபா என்ற விவசாய சங்கத்தின் தலைவர் சந்தனம் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அரசு வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப் போவதாக அறிவித்திருந்தது. ஆனால் மூன்று சட்டங்களை ரத்து செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று விவசாயிகள் பிடிவாதமாக இருக்கின்றனர்.