நடிகை பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை பார்வதி நாயர் நிமிர் , கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அறிமுக இயக்குனர் தாமரைசெல்வன் இயக்கும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் . இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
இதையடுத்து இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘ரூபம்’ என்ற டைட்டிலுடன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் பார்வதி நாயர் போலீசாக நடிக்கிறார் . சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் இந்தத் திரைப்படம் தயாராகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.