Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மேலே வீடு…. கீழே கடை…. அசந்து தூங்கிய குடும்பம்… உள்ளே நுழைந்த கொள்ளையர்கள்… திண்டிவனத்தில் அதிர்ச்சி ..!!

திண்டிவனத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் மரக்காணம் ரோடு நாகலாபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் குடும்பத்தினருடன் மாடி வீட்டில் வசித்து வருகிறார். கீழ்ப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி குடும்பத்தை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி வெல்டிங் பட்டறை கதவை பூட்டாமல் குடும்பத்துடன் படுத்து உறங்கியுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் நள்ளிரவில் வீட்டில் புகுந்து அங்கு உள்ள பூஜை அறையில் 4 பவுன் நகை மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.

அப்போது ஏதோ சத்தம் கேட்டு எழுந்த தட்சிணாமூர்த்தி திருடர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் மர்ம நபர்களை பிடிக்கச் சென்றார். ஆனால் மர்ம நபர்கள் அவர் கையில் சிக்காமல் நகை மற்றும் செல்போனுடன் தப்பிச் சென்றனர். மர்ம நபருடன் வந்த மற்றொருவரும் தப்பிச் சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருடப்பட்ட நகை மற்றும் செல்போனின் மொத்த மதிப்பு 1½ லட்சம் இருக்கும் என்று தெரிவந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.

Categories

Tech |