Categories
மாநில செய்திகள்

சென்னையை விடாமல் விரட்டும் மழை… வாகன ஓட்டிகள் பெரும் அவதி…!!!

சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதனால் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடாக உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறிப்பாக தி நகர், கிண்டி, அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர், ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாகவும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதனால் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

 

Categories

Tech |