Categories
மாநில செய்திகள் வானிலை

புயல் நகரவில்லை… மழை குறையவில்லை… தமிழகத்தில் ஏழு மாவட்டத்திற்கு எச்சரிக்கை..!!

புயலின் காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பதை பார்ப்போம்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழையும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கேரள பகுதியை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 சென்டிமீட்டரும்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 சென்டிமீட்டரும்,

லால்பேட்டையில் 28 சென்டிமீட்டரும் மழை

பரங்கிப்பேட்டை (கடலூர்) 26,

மணல்மேடு (நாகப்பட்டினம்), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 25,

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 22,

சீர்காழி (நாகப்பட்டினம்), குடவாசல் (திருவாரூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்) தலா 21,

ராமேஸ்வரம் 20,

பேராவூரணி (தஞ்சாவூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்) , புவனகிரி (கடலூர் ), மயிலாடுதுறை தலா 19,

கறம்பக்குடி (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) தலா 17,

மதுக்கூர் (தஞ்சாவூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) தலா 16 ,

ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்ண) தலா 15 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

Categories

Tech |