புயல் காரணமாக மழை பெய்வதால் காரைக்கால் மாவட்டத்திற்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயலானது திருகோணமலை அருகே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த புரேவி புயலானது இன்று பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக புதுச்சேரி மாநில பகுதியான தமிழகத்தின் காரைக்கால் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக நேற்று காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புயல் காரணமாக இரவு முதல் மழை பெய்வதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.