நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சமூக வலைத்தள பக்கத்தை மர்ம நபர்கள் கைப்பற்றி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வரலட்சுமி ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து தாரைதப்பட்டை, விக்ரம்வேதா ,சண்டைக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்தவர். சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் வரலட்சுமி தனது ட்விட்டர் , இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கொரோனா விழிப்புணர்வு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருபவர் . இந்நிலையில் அவருடைய சமூக வலைதளப் பக்கங்கள் மர்ம நபர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனால் நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்னுடைய கணக்குகளை மீட்க இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதுவரை என் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் இருந்து மெசேஜ் வந்தால் கவனமாக இருக்கவும். கூடிய விரைவில் என்னுடைய கணக்குகள் மீட்கப்பட்டவுடன் நானே அதை உங்களுக்கு தெரிவிப்பேன் . எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி’ என கூறியுள்ளார்.