Categories
தேசிய செய்திகள்

“இரவில் ஊரடங்கு” மீறினால் சிறை….. கொரோனாவை தடுக்க மாஸ்டர் பிளான் போடும் மாநிலம்….!!

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவக்கூடிய அச்சம் காரணமாக மாநில அரசு திட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின் பெயரில் அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.  கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் கர்நாடக மாநிலம் இருக்கின்றது. நேற்று நிலவரப்படி 8,68,749 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8,54,326 பேர் குணமடைந்து விட்டனர். 6,996 பேர் பலியாகி இருக்கின்றனர்.

தற்போது 7,427 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். இதுவரை அம்மாநிலத்தில் 1.1 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் அடுத்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நுட்ப ஆலோசனை குழு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளது. அதன் பெயரில் அம்மாநிலம் வரைவு ஒன்றை தயாரித்துள்ளது.

மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் அடைய வாய்ப்புள்ளதால் முக கவசம் அணிவது தீவிரப்படுத்த வேண்டும். மீறினால் அதிகபட்ச அபராதம் விதிக்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இரண்டாவது அலை காரணமாக ஜனவரி 1-ஆம் தேதி முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. அதன்படி இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். டிசம்பர் 26ஆம் தேதி முதலே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பொது இடங்களுக்கு தடை விதிக்கப்படும். அதாவது ஹோட்டல், ரெஸ்டாரன்ட்கள், ஆகியவற்றில் கொண்டாட்டங்கள் நடத்தக்கூடாது.

முக்கியமாக சாலைகளில் கொண்டாட்டங்கள் நடைபெற கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை குறித்து விரிவான ஆலோசனை நடத்தி, அம்மாநில அரசு இறுதி கட்ட முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு சில மணி நேரம் சிறை தண்டனை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |