ஹெச்-1பி விசாகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ஹெச்-1பி விசாகளுக்குகான கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விசா திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் சம்பளத்தில் கட்டுப்பாடு, சிறப்பு பொறுப்புகளுக்கு கட்டுப்பாடு என அமெரிக்க நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சந்தித்தனர். இந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயல்படவில்லை என்றும், விசா விதிமுறைகளை மாற்றியதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நீதிபதி ஜெப்ரி போயட் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா 85,000 பேருக்கு விசாக்களை விநியோகித்து வருகிறது. இதன் வாயிலாக தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், வேலைவாய்ப்பு என வெளிநாட்டவர்கள் பயன்பெறுகிறார்கள். எல்லா நாட்டவரும் ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்தாலும் அதிகளவு விசாக்களை தட்டி செல்வது இந்தியர்களே.
அடுத்தபடியான இடத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். வழக்கமாக ஹெச்-1பி விசாக்கள் 3 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம். ஹெச்-1பி விசா மூலம் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த 6 லட்சம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்று பயனடைந்து வந்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. தற்போது டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவியதால் இந்த அறிவிப்பை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இன்று அளவிலும் அமெரிக்கா சென்று வேலை பார்ப்பதற்கு பலரும் ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கு இந்த விசா தடை ரத்து பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.