பிறந்த குழந்தையை விற்பனை செய்ததாக கூறி அரசு ஊழியர் மற்றும் செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது அவர் தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. இப்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து, காதல் வரம்பு மீறியதால் கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் காதலன் இவரை திருமணம் செய்ய மறுத்ததால், இந்த குழந்தையை எப்படியாவது பெற்றெடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் விரும்பியுள்ளார். பிரசவ காலத்தில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் பாலகிருஷ்ணன் குழந்தை இறந்து பிறந்தது, எனக்கூறி பிரசவத்திற்கு பிறகு பெண்ணை அனுப்பி வைத்து விட்டனர்.
ஆனால் நலமாக பிறந்த குழந்தையை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேறு நபருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் அரசு மருத்துவர் மற்றும் இரண்டு செவிலியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து கூறுகையில்:” நான் கர்ப்பம் தரிக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள், மற்றவர்கள் எனது குழந்தை இறந்து பிறந்தது என்கின்றார்கள்” என அழுது கொண்டே கூறினார்.