முதல் சர்வதேச போட்டியில் முதல் விக்கெட்டை பெற்ற நடராஜனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். நடராஜன் டி20 தொடர்களில் மட்டுமே இதுவரை விளையாடி இருந்தார். நவ்தீப் சைனி முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால் ஒருநாள் தொடரில் கூடுதலாக நடராஜன் பெயரும் இடம்பெற்றது. இதற்கான அறிவிப்பை முதல் ஒருநாள் போட்டி துவங்கும் முன் பிசிசிஐ அறிவித்தது.
இன்றைய போட்டியில் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். நடராஜன் இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை தொடங்கியுள்ளார். இந்த வீடியோ பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பல போராட்டத்திற்கு பின்னர் ஒரு சிலர் வாழ்க்கையில் வெற்றி பெற்றால், நாம் வெற்றி பெற்ற மாதிரி ஒரு உணர்வு வரும் அப்படிப்பட்ட ஒரு உணர்வு இந்த வீடியோவை பார்க்கும் போது ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=XOjuEP7d530&feature=youtu.be