Categories
மாநில செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… தமிழக அரசு தயாராக உள்ளது… முதலமைச்சர்…!!!

தமிழக மக்கள் புயல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை மன்னார் வளைகுடா பகுதியை கடந்த பிறகு டிசம்பர் 4ஆம் தேதி தென்தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கிறது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் பொதுமக்கள் புயல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. அரசின் அறிவுரைகளை பின்பற்றி முழு ஒத்துழைப்பு நல்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |