வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்னும் 5 மணி நேரத்தில் வலுவடையும் என்பதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது பாம்பனுக்கு தென் கிழக்கில் 530 கிமீ தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இன்னும் ஐந்து மணி நேரத்தில் புயல் மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் அதி கனமழை பெய்யும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.