Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்துவது மிகவும் ஆபத்து என பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இருந்தாலும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவு வெளியான பிறகு மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. அதில் தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் சில அரசு பள்ளி மாணவர்கள் வெளியேறினர்.

இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களில் தர வரிசை அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்த அறிவிப்பு ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |