Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி… போட்டிக்கு போட்டி… தயாராகும் போலி மருந்துகள்… பாதுகாப்புத்துறை எச்சரிக்கை..!!

கொரோனா தடுப்பு மருந்தை போலவே போட்டிக்கு போலி மருந்துகள் தயார் செய்யப்பட்டு வருவதால் பாதுகாப்புத்துறை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மார்டினா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்கள், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம், பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் ஆஸ்ட்ரா செனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடித்து விற்பனைக்கு தயாராகி வருகிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பில் சோதனையை  மேற்கொள்ள பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

இந்த சோதனையில் இந்த தடுப்பு மருந்துகள் வெற்றி பெற்றால் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதனால் தடுப்பு மருந்து நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலையில் ஜனவரி மாதம் தடுப்பு மருந்துகளை விற்பனை செய்ய தனியார் நிறுவனங்கள் அதீத போட்டியில் ஈடுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். போலி தடுப்பு மருந்துகள் பலவற்றை விற்க சில நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ளும், இவர்களிடமிருந்து உலகம் கவனமாக தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுக்கத்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத தடுப்பு மருந்துகளை எந்த அமெரிக்க அரசும் ஏற்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரக்கூடியது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிக லாபத்தை தடுப்பு மருந்து விற்பனை மூலமாகவே இந்த நிறுவனங்கள் ஈட்டும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக மூன்றாம் கட்டம் பரிசோதனையை நிறைவு செய்யாத தடுப்பு மருந்துகள் மறைமுகமாக விற்கப்படலாம் என கூறப்படுகிறது.

Categories

Tech |