வாழைப்பூ, நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகவும் நல்லது.
வாழைப்பூ – 2
சின்ன வெங்காயம் – 1 1/2 கப்
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
கல் உப்பு – தேவைக்கேற்ப
நறுக்கிய இஞ்சி – 1 1/2 ஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 1 1/2 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
உளுந்து பருப்பு – 2 ஸ்பூன்
சீரகம் – ½ ஸ்பூன்
கடலை பருப்பு – ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
தனியா தூள் – ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் வாழைப்பூவின் நடுவில் இருக்கும் நரம்பை மட்டும் நீக்கி, அதை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய வாழைப்பூ, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுந்து பருப்பு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து, பின் கடலை பருப்பு, தனியா தூள், இஞ்சி, பூண்டு, பி.மிளகாய், சின்ன வெங்காயத்தையும் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி விடவும்.
இறுதியில் அதனுடன் வேகவைத்த வாழைப்பூவை போட்டு கிளறி, 2 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், சுவையான வாழைப்பூ கூட்டு தயார்.