Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு பதில்… அப்பாவி பெண்ணை கொன்று… ஆள்மாறாட்டம் செய்த வழக்கு… அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!

கோவை அருகே ஆள்மாறாட்டம் செய்ய ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை, சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் வசித்து வரும் தம்பதி ராஜவேல்-மோகனா. இவர்கள் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு இவர்கள் மீது நிதி நிறுவன மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தப்ப எண்ணிய ராஜவேல் தன் மனைவி இறந்து விட்டதாக போலி சான்றிதழ் ஒன்றை அளித்துள்ளார். இதனால் சந்தேகம் எழுந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.

அதில் அம்மாவாசை என்ற பெண்ணை கொலை செய்து சடலத்தை எரித்து மோகனா தான் இறந்து விட்டார் என்று ராஜவேல் சான்றிதழ் சமர்ப்பித்தது அம்பலமானது. இந்த வழக்கில் ராஜவேல் மற்றும் அவரது மனைவி மோகனா ஆகியோரும், உடந்தையாக இருந்ததாக பொன்ராஜ் மட்டும் பழனிசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து அம்மாவாசை என்ற பெண்ணை கொலை செய்ய உடந்தையாக இருந்ததை பொன்ராஜ் ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கில் கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. திட்டமிட்டு அப்பாவி பெண்ணை கொலை செய்த ராஜவேல் மோகனா தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கிய நீதிபதிகள் மூவருக்கும் 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |