பெண்களின் சரும பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி, நிரந்தர தீர்வை காண இந்த செய்தி குறிப்பில் காணலாம்:
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு – 2
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக எடுத்து, அதனுடன் எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் மற்றும் தேன் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை முகம், கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பிரகாசமாக ஜொலிக்கும்.