தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்வது உறுதி என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் கபடி, சிலப்பட்டம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை அவர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்ற தேர்தல் ஆச்சி மாற்றத்திற்காக இருக்கும் என்று கூறினார். பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உழவர் திட்டங்களில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு பற்றி பேசும்போது மக்கள் தாங்களாகவே 800 கோடி ரூபாய் என்று கூறுவதாகவும் அந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஊழலை பற்றி மக்கள் அறிந்து வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயத்தை பெரு நிறுவனங்களிடம் அடகு வைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.