Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கே வரும் ஐயப்ப பிரசாதம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்ற நிலையில், பக்தர்கள் குறைந்த அளவு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளிலேயே வழங்க இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் எந்த தபால் நிலையத்திலும் 450 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு ரசீதின் கீழ் 10 பாக்கெட்டுகளை பதிவு செய்யலாம். ஒரு பக்தர் எத்தனை பாக்கெட்டுகளை வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஐயப்ப பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |