Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போலீஸ் ஏட்டு மீது வழக்கு…. தப்பு பண்ணிட்டு மிரட்டல் வேறயா….? விசாரணையை தொடங்கிய காவல்துறை….!!

விருதுநகர் பர்மா காலனி அருகே போலீஸ் ஏட்டின் கள்ள தொடர்பை  தட்டி கேட்ட  மனைவியை மிரட்டியதால் மகளிர் காவல்துறை வழக்குப்பதிந்து  விசாரணை செய்து  வருகின்றது.

விருதுநகர் மாவட்டம் பர்மா காலனியில் வசித்து வருபவர் சுகன்யா.  33 வயதுடைய இவருக்கும் சென்னை ஆவடி பட்டாலியன் காவல்துறை  பிரிவில்  போலீஸ் ஏட்டடடாக வேலைபார்த்து வரும் சரவணகுமாருக்கும் கடந்த பத்து  ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது. தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே ஏட்டு சரவணகுமார் தன்னுடன் வேலை பார்க்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது  சுகன்யாவுக்கு தெரியவந்ததுள்ளது.

3 மாதங்களுக்கு முன் சுகன்யா இதை  கண்டித்தும் உள்ளார். ஆனால் சரவணகுமார்  அந்தப் பெண்ணுடன் உள்ள தொடர்பை விட மறுத்து உள்ளார். மேலும் சுகன்யாவை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். கையெழுத்து போட  மறுத்த சுகன்யாவுக்கு  பல வகைகளில் துப்புறுதியுளார். அதோடு விருதுநகரில் உள்ள சுகன்யாவின் பெற்றோர் வீட்டிற்கே அவரை அனுப்பியுள்ளார்.

அதன்பிறகும் தொடர்ந்து சரவணகுமார் விருதுநகருக்கும் சென்று  விவாகரத்து பத்திரத்தில் கையொப்பம் இடுமாறு சுகன்யாவை வற்புறுத்தி பிரச்னை  செய்து தவறாக  பேசி மிரட்டல் விடுத்துள்ளார. இது  குறித்து சுகன்யா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார்.  அதன் அடிப்படியில் காவல்துறை போலீஸ் ஏட்டு சரவணகுமார் மீது வழக்கு பதிந்து   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |