வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகளைப் போல மத்திய அரசு நடத்துவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சஞ்சய் ராவுத் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களை டெல்லிக்குள் நுழையவிடாமல் விவசாயிகளை பயங்கரவாதிகளை போலவும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை போலவும் மத்திய அரசு நடத்துவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் திரு. சஞ்சய்ராவுத் வலிறுத்தியுள்ளார்.