தர்மபுரி மாவட்டத்தில் 39 வயது பெண்ணுக்கு 100 வயது என ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 39 வயதுடைய பெண் ஒருவர் புதிதாக ஆதார் அட்டை பதிவு செய்து வாங்கியுள்ளார். அதில் அவரின் 39 வயதுக்கு பதிலாக 100 வயது என பதிவாகியுள்ளது. அதனை திருத்தம் செய்ய முடியாத அவர், அதில் நூறு வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அரசின் திட்டங்களை எதுவும் பெற முடியாமல் இரண்டு ஆண்டாக தவிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் கூறியுள்ளார்.
மேலும் ஆதார் அட்டையில் வயதை திருத்துமாறு தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் அந்த பெண் இன்று மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகள் அலட்சியமே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம்.