Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே பேருந்து தீ விபத்து…உயிர்தப்பிய பயணிகள்…!!

ஓசூர்அருகே தனியார் பேருந்து தீப்பிடித்த  விபத்தில் 20 பயணிகள் அதிஷ்டவசமாக  உயிர்தப்பியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 20 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து திருப்பூர்க்கு பயணித்த  தனியார் பேருந்து ஒசூர்_ கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக  தீப்பிடித்து எரிய தொடங்கியது.

பேருந்து ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால்  அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்து பேருந்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories

Tech |