நாம் தமிழர் ஆட்சி அமையும் போது பிரபாகரன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவோய்ம் என சீமான் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவீரர் நாளையும், எங்களுடைய தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையும் இந்த அரசுகள் கொண்டாடும் என்று நான் சொல்லவில்லை. நாங்கள் எங்களுடைய அரசியல் முன் நகர்வை மிக வலுவாக, மிகக் கூர்மையாக புலிநகம் பதித்தது போல் நாங்க பதித்து பாய்கின்றோம். எங்களுடைய அதிகாரம் இங்கே நிறுவப்படும் போது, உறுதியாக நாங்கள் எங்களுடைய தலைவர் பிறந்த நாளையும், மாவீரர் நாளையும் அரசு விழாவாக கொண்டாடுவோம்.
தைப்பூசத்திற்கு விடுமுறை விடுங்க, தமிழ்நாட்டு நாளுக்கு பொது விடுமுறை விடுங்க என்று கெஞ்சிகிட்டு இருக்க மாட்டோம், நாங்களே முடிவெடுத்து செய்வோம். லாட்டரி பரிசு சீட்டுகளை எல்லாம் தடை பண்ணிவிட்டு, வலைதள வர்த்தகத்தில் இதை திறந்து விடுவது என்பது ஆபத்தானது. எல்லாமே ஒரு சூதாட்டக் களமாக மாறிவிட்டது. நாட்டில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ஏலம் எடுக்க படுகிறார்கள். 6 கோடி, நான்கு கோடி என்று எல்லோரையும் சேர்த்து ஒரு அணியை ஒரு முதலாளி எடுக்கிறார்.
ஒரு விளையாட்டு சூதாட்டமாக மாறி விட்டது.இந்த மாதிரி நாடே ஒரு சூதாட்டக் களமாக, வர்த்தக களமாக, மிகப்பெரிய சந்தை களமாக மாறிக் கொண்டிருப்பது பேராபத்தான போக்கு.வளரும் இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு அறிவை புகட்டுகின்ற, ஒழுக்கத்தை கற்பிக்கின்ற, வாழ்வியல் நன் நெறியை புகட்டுகின்றதையெல்லாம் தருவித்து விட்டுவிட்டு சூதாட்டத்தை ஊக்கபடுத்த ஆன்லைன் விளையாட்ட்டில் ரம்மி விளையாடுங்க என்று சொல்லுறாங்க என சீமான் தெரிவித்தார்.