கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் பொம்மை ஒன்றை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கஜகஸ்தான் நாட்டில் யூரீ டொலோக்சோ என்ற இளைஞர் பாடிபில்டராக உள்ளார். ஓராண்டுக்கும் மேலாக கார்கோ என்ற பொம்மையை காதலித்து வந்துள்ளார். பாலியல் பயன்பாட்டிற்காக இந்த பொம்மை தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது யூரீ டொலோக்சோ இந்த பொம்மையை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் வீடியோவை யூரீ டொலோக்சோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அவளுக்கும் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது’ என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.