Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் உழவர் சந்தை” கெத்து காட்டிய நம்ம சென்னை மணீஷ்…. குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் உழவர் சந்தை அமைத்துள்ளது, மக்களிடையே பேரும் பாரட்டை பெற்றுள்ளது.

சென்னை தாம்பரம் பகுதியில் வசிப்பவர் வேணுகோபால். இவருக்கு மணீஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கட்டுமான மேலாண்மை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள வட கரோலினா மாநிலத்தில் மிகப்பெரிய உழவர் சந்தை கட்டிடத்தை  வடிவமைத்துள்ளார். இந்த கட்டிடம் உழவர் சந்தைக்கு வீடாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் பொழுதுபோக்கு அம்சமாகவும், வருடம்தோறும் நகரத்தின் மிக முக்கிய விழாக்களை  கொண்டாடும் இடமாகவும் இருக்கிறது.

பழமையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் செங்கல் விளைவுகளால் நவீன வசதியுடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமான நடவடிக்கைகளை மணிஷ் நிர்வகித்து வருகிறார். இது நகரத்தின் மையத்தில் ஒரு சிறப்பான இடமாகவும் விளங்குகிறது. புயல் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை உயர் தரமான பொருட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. மாசு படியாத நீர் பயன்படுத்து , நீர் மாசு படிந்ததை எப்படி  பகுப்பாய்வு செய்து தடுப்பது குறித்து அக்கட்டடத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது இளம். வயதில் கட்டுமானத்துறை நிறுவனத்தின் ஒரு சிறந்த விளங்கும் மணீஷை அமெரிக்க மக்கள் பாராட்தி வருகின்றனர்.

Categories

Tech |