Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 நாட்கள் விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் அடுத்த ஆண்டு 11 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் அனைத்திற்கும் ஒவ்வொரு வருடமும் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும். அந்த நாட்களில் அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதன்படி பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு அடுத்த வருடம் 11 நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து ஜனவரி 14, 16, ஏப்ரல் 14, மே 1, 14, ஆகஸ்ட் 15, செப்டம்பர் 10, அக்டோபர் 2, 15, நவம்பர் 4, டிசம்பர் 25 ஆகிய பதினோரு நாட்கள் விடுமுறை விடப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. \

இந்த நாட்களுடன் வார விடுமுறை நாட்களிலும் நியாயவிலைக் கடைகள் இயங்காது என்றும் உணவுத் துறை தெரிவித்துள்ளது. அதனால் மற்ற நாட்களில் மக்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |